இழுத்து மூடப்படும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களும் - தொழிலை இழக்கும் வேலையாட்களும்

டந்த அரசின் ஆட்சியின் போது அரசாங்கம் மக்களுக்கு  ப.நோ.கூ சங்கங்கள் மூலம் வழங்கிய சமுர்த்தி போன்ற கொடுப்பனவுகளை குறித்த திணைக்களங்கள் நேரடியாக கொடுக்க எடுத்த தீர்மானத்தின் பின்னர் பல.நோ.கூ.சங்கங்களுக்கு வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் பின்ன கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றியவர்கள் சிலர் வேலைகளில் இருந்து விலகிச் சென்றனர். இன்னும் சிலர் வேறு வழியின்றி அதில் தொடர்ந்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் பணமின்றி அல்லல் பட்டுக்கொண்டிருப்பதாக தொழிலாளர்கள் கண்ணீர்மல்க கதை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல மாதங்கள் ஊழியர்கள், உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்காத காரணத்தினால் பெருநாளைக் கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியாத நிலையில் இருப்பதாக ஊழியர் ஒருவர் இன்று இம்போட்மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

எனவே கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப் பதவிக்கு போட்டி போட்டு பதவிகளை எடுக்க முண்டியடிக்கும் இன்றையவர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்காமல் இருப்பது அவர்களின் இயலாமையைக் காட்டுகிறது.

எனவே முடிந்ததைச் செய்யுங்கள். முடியாததனை முடிந்தவர்களிடம் கொடுத்து விட்டு விலகியிருப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும். ஆனால் எந்த விடையத்தினை எடுத்தாலும் அதன் உள்ளே அரசியலை உட்புகுத்தி அனைத்தையும் குப்பையில் கொட்டும் அவல நிலையே இன்று அதிக விடையங்களில் தலை தூக்கியிருப்பது கண்டிக்கத் தக்கது.

ஆகவே ப.நோ,கூ,சங்கத்தை மேற்பார்வை செய்யும் அமைச்சு இதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்களும், உத்தியோகத்தர்களும் கோரிக்கை விடுகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -