கடந்த நான்காம் திகதி திருகோணமலையில் காணாமற்போனதானதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை பலாங்கொடை ஹல்துமுல்ல பிரதேசத்த்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பஸ் ஒன்றில் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து முன்னெடுத்த சுற்றுவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நபர் கடன் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காகவா தலைமறைவாகியிருந்தார் என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பண்டாரகம பகுதியைச் சேரந்த குறித்த நபர் தங்காபரண ஏலமொன்றுக்கு சிலருடன் திருகோணமலைக்கு சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக அவரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.