க.கிஷாந்தன்-
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரவளை - தியத்தலாவ பிரதான வீதியில் பண்டாரவளை பகுதியிலிருந்து தியத்தலாவ பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி தியத்தலாவ காகொல்ல பகுதியில் 20 அடி பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் மதில் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
06.09.2016 அன்று செவ்வாய்யகிழமை அதிகாலை 5 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.