இந்தியாவில் டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசில் சமூக நலத்துறைஅமைச்சரான சந்தீப் குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அமைச்சர் 6 பெண்களுடன் ஆபாசமாக இருந்ததாக வெளியான வீடியோவினாலே இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சர்ச்சைக்குரிய இறுவெட்டு ஒன்றை கட்சித்தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கட்சியினர் சமர்ப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து கட்சியின் கொள்கைக்கும், நற்பெயருக்கும் களங்கம்ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மந்திரி சந்தீப் குமாரை நேற்று முன்தினம் கெஜ்ரிவால் பதவி நீக்கம் செய்தார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தீப் குமார் கடுமையாக மறுத்துவந்தார்.
இந்நிலையில் இன்று சந்தீப்குமாரை ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படைஉறுப்பினரிலிருந்து நீக்குவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -