சீன - ஆசிய எக்ஸ்போ கண்காட்சியில் தென்னாசியாவின் முதலாவது நாடாக இலங்கை பங்கேற்பு..!

லங்கையுடனான சீனாவின் வர்த்தக, முதலீடு மற்றும் பொருளாதார உறவுக்கு வழிவகுத்தது, கடற்கலங்கலினூடான ஆசியாவின் தென்பகுதியால் இணைக்கப்பட்ட சீனாவின் பட்டுப்பாதையே எனவும், தற்போது இவ்விரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருளாதார உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சீனாவின் நணிங்கில் இடம்பெற்ற சீன-ஆசிய எக்ஸ்போ13 (CAEXPO13) கண்காட்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன், இலங்கையின் விஷேட விருந்தினராகப் பங்கேற்று உறையாற்றினார். சீன, ஆசிய நாடுகளின் 15 தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் றிசாத்துக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

தென்னாசியாவின் ஒரேயொரு விருந்தினராகவும், சீன-ஆசிய எக்ஸ்போ ஆரம்பித்ததிலிருந்து உலகத்திலேயே மூன்றாவது சிறப்பு விருந்தினர் நாடாகவும் இலங்கை அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டமை மிகவும் சிறப்பம்சமாகும். இலங்கையின் விஷேட விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் றிசாத், குவாங்ஷோ மாகாணத்தின் தலைநகரான, நண்ணிங்கின் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான கண்காட்சியில் உறையாற்றினார்.

அமைச்சர் இங்கு உரையாற்றுகையில், 

இந்த பிரமாண்டமான கண்காட்சியில் இலங்கை விஷேடமாக கௌரவப்படுத்தபட்டமைக்கு சீனாவுக்கும், அதன் மக்களுக்கும் எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சீனாவின் இந்தப் பட்டுப்பாதை விரிவாக்கம் முயற்சி பாராட்டத்தக்கது.

இலங்கையுடனான வர்த்தக முதலீட்டு, பொருளாதார உறவுகள், சீனாவின் பூகோளநுளைவு மூலோபாயத்துடன் இணைந்து வலுவடைந்துள்ளது. சீனாவின் இந்த முன்னெடுப்புக்களை நாம் மனதார வரவேற்கின்றோம். 

சீன வர்த்தக நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் இலங்கையில் முதலீடு செய்யுமாறு நாம் அழைப்புவிடுப்பதோடு, அதன்மூலம் இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் ஏற்படுமென நாம் தெரிவிக்கின்றோம். 

இந்த மாநாடு சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே வலுவான, காத்திரமான உறவுகளை வளர்ப்பதற்கு முக்கிய பங்குவகிக்கும் என கருதுகின்றேன். புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அடுத்தகட்ட சமூகப் பொருளாதார முயற்சிகளுக்கும், அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கும் சீனாவின் இந்த சமூக சந்தைப்பொருளாதார முன்மாதிரி ஒரு பலமான வழிகாட்டியாக அமையுமென நாம் கருதுகின்றோம்.

இவ்வாறான தொடர்ச்சியான முன்னெடுப்புக்கள் உலகலளாவிய நாடுகளுடனும் குறிப்பாக, சீனாவுடன் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்துவதுடன், பிரதான அபிவிருத்திப் பங்காளியாகவும் செயற்பட வழிவகுக்கும். 

2015 - 2016 சுட்டெண்ணின் படி உலகலளாவிய போட்டிச்சந்தையில் இலங்கை 68வது இடத்தை வகிக்கின்றது. மேலும், இதனை முன்னேற்ற எங்கள் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. உலகின் ஏனைய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை விரிவாக்க இலங்கை கேந்திர நிலையமாக விளங்குகின்றது. குறிப்பாக கிழக்கு, மேற்கு பிரதேசங்கள், கடல் மற்றும் ஆகாய போக்குவரத்துக்கு உகந்ததாக அமைந்துள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

ஏற்கனவே எமது நாடு சதந்நிர வர்த்தக உடன்படிக்கைகளை இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் மேற்கொன்டுவருகின்றது. உற்பத்தியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இதன் மூலம் பிரதான வர்த்தகப் பாதையொன்றுக்கு வழிவகுத்துள்ளோம். மேலும், சீனாவும், ஆசிய முதலீட்டளர்களும் இதுபோன்ற பிரதான உடன்படிக்கைகளை, இலங்கையுடன் மேற்கொள்வதனூடாக, புதிய முதலீட்டாளர்களுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை, பல அருமையான சந்தர்ப்பங்களையும், சழுகைகளையும் வழங்குகின்றது. இலங்கையின் கேந்திர அமைவிடம், தேர்ச்சிபெற்ற தொழிலாளர்கள், வர்த்தக உட்கட்டமைப்பு, பொதுச்சட்ட அடிப்படையிலான சட்டமுறைகள், நவீன உயர்ரக கடற்துறைமுகச் செயற்பாடுகள், வாழ்க்கைக்தர வசதிகள் போன்றவை முதலீட்டாளர்களுக்கு வசதியாகவும், வாய்ப்பாகவும் அமையும் என நாம் கருதுகின்றோம். சீனா, இலங்கையின் முதலீட்டில் தொடர்ச்சியாக ஆர்வங்காட்டி வருகின்ற போதும், இந்த மாநாடு மேலும் அதனை விரிவுபடுத்த வழிவகுக்கும் என நாம் நம்புகின்றோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -