காரைதீவு குறூப் நிருபர் சகா-
நாடறிந்த கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் 'ஊருக்கு திரும்பணும் ' எனும் சிறுகதைத்தொகுப்பு நூல் அறிமுகவிழா நாளை செப்.03ஆம் திகதி சனிக்கிழமை காலை 10மணிக்கு திருக்கோவில் கலாசார நிலையத்தில் ஓய்வுநிலை கலாசார உத்தியோகத்தர் என்.எஸ்.தியாகராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. திருக்கோவில் உதசூரியன் கல்வி அபிவிருத்திப் பிரிவும் கல்வி மற்றும் கலாசார அபிவிருத்திக்கான அமைப்பும் இணைந்து இவ்அறிமுகவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கலந்துசிறப்பிக்கவிருக்கின்றார். கௌரவ அதிதிகளாக. கே. விமலநாதன் (அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர்) எஸ்.ஜெகராஜன் (திருக்கோவில் பிரதேச செயலர்) ஆர்.சுகிர்தராஜன் (திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர்) செ.குணபாலன் (பீடாதிபதி தெ.கி. பல்கலைக்கழகம்) வைத்திய கலாநிதி மோகனகாந்தன் (மாவட்ட வைத்திய அதிகாரி) வைத்திய கலாநிதி சுலோசனாதேவி ராஜேந்திரா (சுகாதார வைத்திய அதிகாரி) ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.
விசேட அதிதிகளாக கலாநிதி க.கணேசராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் தெ.கி. பல்கலைக்கழகம்) வைத்தியக் கலாநிதி கே. அருளானந்தம் (சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பலகலைக்கழகம்) கலாநிதி. ப.பிரதீபன் (சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்) வ. ஜெயந்தன் (கோட்டக் கல்வி பணிப்பாளர் பொத்துவில்) யோ.ஜெயக்கண்ணன் (பிரதி கல்விப் பணிப்பாளர் திருக்கோவில்) ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.
முதல் பிரதிகளை இரா. ஆனந்தராஜா (தொழில் அதிபர்) க.பாஸ்க்கரன் (தொழில் அதிபர்) எஸ். குமார் (தொழில் அதிபர்) ஆகியோர் பெறுவார்கள்.
வரவேற்புரையை திருக்கோவில் கலாசார உத்தியோகத்தர் திருமதி ராதிகா.கருணாகரன் நிகழ்த்த நூல் அறிமுகவுரையை மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பக் கல்லூரி பணிப்பாளர் செ. ஜெயபாலன் நிகழ்த்துவார். நூல் வெளியீட்டு நிகழ்வை ஓய்வு நிலை மேற்பார்வை கிராம உத்தியோகத்தர் எஸ்.கந்தப்பன் நிகழ்த்த நூல் திறனாய்வை செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் நூல் மதிப்பீட்டை திருக்கோவில் கவியுவன் மற்றும் ஆசிரியரின் ஆளுமை பற்றி தம்பிலுவில் ஜெகா ஆகியோர் நிகழ்த்துவர்.
ஏற்புரையை கோவிலூர் செல்வராஜன் நிகழ்த்துவார்.இறுதியில் இசை நிகழ்ச்சி. மண்வாசப் பாடல்கள் இடம்பெறும். லண்டனில் வாழும் திருக்கோவிலைச்சேர்ந்த கோவிலுர் செல்வராஜன் இதுவரை 10நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தற்சமயம் இலங்கை வந்துள்ள அவரை தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகள் பேட்டிகண்டு கௌரவித்துவருகின்றன. இலங்கை வானொலி இலங்கை தொலைக்காட்சி ஆகியவற்றில் முன்னர் சேவையாற்றிய கோவிலுர் செல்வராஜன் சிறந்த எழுத்தாளராவார்.
கோவிலூர் செல்வராஜனின் இருநூல்களின் முதல் அறிமுகவிழா கடந்த சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது..