மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட சகோதாரிகள் இரண்டாவது நாளாகவும் சத்தியாகிரக போராட்டத்தில்...!

க.கிஷாந்தன்-
பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சகோதரிகள் இருவர் இரண்டாவது நாளாக 21.09.2016 அன்றும் தொடர்ந்தும் பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்று வட்டத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரில் ஒருவருக்கு மாத்திரமே வீடு கிடைக்கப்போவதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இரண்டாவது நாளகவும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மீரியபெத்த தோட்டத்தில் இரு குடும்பங்களாக இரு வீடுகளில் வாழ்ந்து வந்த இவர்கள் மண்சரிவில் சிக்குண்டு தமது உறவுகளையும் பரிகொடுத்து, தமது உடமைகளையும் இழந்த நிலையிலேயே குறித்த முகாமில் தங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை தாம் இவ்விடத்தை விட்டு கழைந்து போவதில்லை என போராட்டத்தை ஆரம்பித்துள்ள சகோதரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -