உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 கொழும்பில் எதிா்வரும் டிசம்பா் 10,11,12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம் மாநாடு கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சா் றிசாத் பதியுத்தீன், அவா்களின் தலைமையிலும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ் அமீர்அலி அவா்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இம்மாநாட்டினை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
இம்மநாடு பற்றி மேல்மாகாண முஸ்லீம் எழுத்தாளா்களுக்கு அறிவுறுத்தும் கூட்டம் நேற்று (18) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இவ் ஆய்வகத்தின் தலைவா் காப்பியக்கோ டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீன் மற்றம் செயலளாா் அஸ்ரப் சிகாப்தீன் , டொக்டா் தாசீம் அகமத் ஆகியோா் மாநாடு பற்றி விளக்கமளித்தாா்கள். மேல்மாகாண இணைப்பாளா்களா கவிஞா் நஜ்முல் ஹூசைன், சிரேஸ்ட ஊடகவியலாளா் எம். ஏ.எம் நிலாம் ஆகியோா்கள் தெரிபு செய்யப்பட்டனா்
இங்கு கருத்து தெரிவித்த காப்பியக்கோ டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீன் -
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் மு தலாவது மாநாடு 1966ம் ஆண்டு மருதமுனையில் நடைபெற்றது. 2002ஆம் ஆண்டு உலக இஸ்லாமிய மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. 14 வருடங்களுக்கு பிறகு இவ் ஆண்டு இம் மாநாடு நடைபெறவுள்ளது. இவ் ஆய்வமையத்தின் இவ் ஆண்டுடன் 50வது நிறைவு பொன்விழா கொண்டாடப்படவுள்ளது. டிசம்பா் 10,11.12ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஆய்வரங்குகள், கவியரங்கு , உரையரங்கு, படைப்பாளிகளை கௌரவித்தல், கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் இடம் பெறவுள்ளன. மநாட்டில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு படைப்பிலக்கியவாதிகள் ஆய்வாளா்கள் இலக்கிய ஈடுபாடுள்ளோா் மாநாட்டில் பேராளா்களாகக் கலந்து கொள்வாா்கள். அந்த வகையில் மலேசியா, சிங்கப்புர், ஜக்கிய அரபு ராஜ்யம் ஆகிய நாடுகளில் இருந்தும் இம்மாநாட்டில் கட்டுரையாளா்களாகவும் வளவாளா்களாகவும் பலர் கலந்து கொள்ளவுள்ளனா்.
இலங்கைப் பேராளா்கள் தமது விண்ணப்பத்துடன் 1000 ருபா செலுத்தி முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளமுடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இம்மாநாட்டுக்காக வா்த்தகா்கள், நலன்விரும்பிகளது அனுசரனையும் எதிா்ப்பாாக்க்படுகின்றது. கட்டுரைகள் எதிா்வரும் செப்டம்பா் 30ஆம் திகதிக்கு முன்னா் டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீன் 16ஏ ஸ்ஹூல் அவெனியு, ஸ்டேசன் றோட் , தெஹிவளை என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றனா்.