இன்று காரியாலயம் செல்வதற்காக எனது மிதி சைக்கிளில் பிரதான வீதியில் பயணம் செய்து கொண்டிருந்தேன் . அக்கரைப்பற்று பக்கம் இருந்து கல்முனை பக்கமாக அப்போது வீதியின் இடதுபுறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KN 2808 எனும் வெள்ளை நிற காரின் கதவு திடீரென திறக்கப்பட்டது. அவ்வேளை அதை சற்றும் எதிர்பார்க்காத நான் காரின் கதவு திறக்கப்பட்ட வேகத்தில் வீதியில் நடுவில் தூக்கி வீசப்பட்டேன்.
விழுந்ததும் எதுவும் விளங்கவில்லை உடனே எழுவதற்கு முயற்சித்தேன்.. கஸ்டப்பட்டு எழும்பி எனது சைக்கிளையும் நிமிர்த்தி வீதியின் ஓரத்தில் சாத்திவிட்டு வந்துசேர்ந்தேன்.. அதுவரைக்கும் விழுந்த என்னை ஒரு வார்த்தைகூட விசாரிக்கவும் இல்லை கவனிக்கவும் இல்லை.. தன் காரின் கதவை சரிபார்த்துவிட்டு அவசரமாக வங்கிக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.. இப்படியான ஒரு கல்நெஞ்சம் கொண்ட ஒரு மனிதன் இருக்கானா சே...
விழுந்ததுகூட வலிக்கவில்லை அவரின் செயல் வலிக்கிறது.. நடு வீதியில் விழுந்து கிடக்கிறேன் தள்ளிவிட்டுவிட்டு இதயமே இல்லாதவன் போல சென்றுவிட்டார்.. அல்லாஹ்வின் உதவியால் கை. காலில் காயங்களுடன் உயிர் தப்பிவிட்டேன்.. இல்லையென்றால் அவரின் நிலை ,,?
நான் விழுந்த நேரம் பின்னால் வந்த வாகனம் என்மேல் ஏறி இருந்தால் இவர் என்ன செய்வார்... இவர் செய்யும் தொழில் இவரின் ஈமானையும் இழக்கவைத்து விட்டது போல உணர்கிறேன்...
இப்போது உடம்பு வலியால் அவஷ்தைப் படுகிறேன்..
ரிஸ்லி சம்ஷாட் அட்டாளைச்சேனை -15
குறிப்பிட்ட இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட காரின் உரிமையாளரான அட்டாளைச்சேனை இலங்கை வங்கியின் முகாமையாளரை எமது இணையத்தள செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:
சம்பவம் உண்மையானது ஆனால் நான் கீழே இறங்கி அவரின் சைக்கிலைத் தூக்கி விட்டே வந்தேன் என்று பதில் கூறினார்.
அவரிடம் பேசினீர்களா என்று கேட்டதற்கு இல்லை அவரது தொலைபேசி இலக்கத்தைத் தாருங்கள் என்றார். ஆனால் இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.