பொறியியலாளர் ஷிப்லி பாறுக் செம்மன்ணோடை கிராமத்திற்கு விஜயம்..!

எம்.ரீ. ஹைதர் அலி-
ட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் 208D, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள செம்மன்ணோடை மற்றும் மீள்குடியேற்ற கிராமமான கொண்டையன்கேணி ஆகிய கிராமங்களுக்கு 2016.09.18ஆந்திகதி மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பின் பேரில் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவரும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இச்சந்திப்பானது செம்மன்ணோடை கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இதில் இக்கிராமமானது நெருங்காலம் தொட்டு அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், மீள்குடியேற்ற கிராமமான கொண்டையன்கேணியில் வீதிகள் செப்பனிடப்படாமலும், மின்சார இணைப்பு இல்லாமலும், வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத நிலையில் இக்கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், செம்மன்ணோடை முதியோர் சங்கத்தின் சார்பாக அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சுயதொழில் மேற்கொள்வதற்கு வாழ்வதார உதவிகளையும் மற்றும் செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு இடப்பற்றாக்குறை காரணமாக அருகிலுள்ள காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக பலரிடம் நிதியும் கோரிவருவதாகவும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கபூர் அவர்களினால் பொதுமக்கள் சார்பாக பல குறைபாடுகள் மாகாண சபை உறுப்பினருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் உடனடித்தீர்வுகளாக பாடசாலையின் காணி கொள்வனவுக்காக தனது தந்தையின் ஞாபகார்த்தமாக 25000 (இருபத்தையாயிரம்) ரூபா வழங்குவதாகவும், கொண்டையன்கேணி பள்ளிவாயல் பின் வீதியின் 250 மீட்டர் தூரம் மின்சார இணைப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான ஒழுங்குகளை முன்கூட்டியே மேற்கொண்டு விட்டதாகவும், அக்கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்திற்கான இருப்பிடத்தை பலப்படுத்தும் பணியையும் உடன் செயவதற்கான ஒழுங்குகளை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொண்டையன்கேணி மீள்குடியேற்றக் கிராமம், எம்.கே.ஏ. ஹாஜியார் தோட்டம் ஆகியவற்றிட்கு நேரில்சென்று அங்குள்ள நிலவரங்களை பார்வையிட்டதுடன், செம்மன்ணோடை தக்வா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கும் சென்று பள்ளிவாயல் கட்டட குறைபாடுகளையும் பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் பள்ளிவாயல் கட்டட குறைபாடுக்கான மதிப்பீட்டறிக்கை மற்றும் முதியோர் சங்கத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ளவுள்ளவர்களின் விபரங்களையும் வழங்குமாறும் இன்ஷாஅல்லாஹ் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு உதவிகளை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவரும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செம்மண்ணோடை முக்கியஸ்தர் மன்சூர், கிராம அபிவிருத்தி சங்கம், முதியோர் சங்கம், சாட்டோ விளையாட்டுக் கழகம்,தக்வா ஜூம்ஆப் பள்ளிவாயல் என்பனவற்றின் தலைவர், செயலாளர் என பலரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -