பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்-
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தியில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலும் அதன் நிருவாகமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அட்டாளைச்சேனையில் நிலவுகின்ற கலாச்சார விடயங்களை முன்னின்று செயற்படுத்த இந்த நிருவாகம் முன் நிற்கவேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் நிதியிலிருந்து 01மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச ஜும்மா பெரிய பள்ளிவாயலில் அமைக்கப்பட்ட ஒலி அமைப்பினை அமைச்சர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி பள்ளிவாயலின் தலைவரும், விருவுரையாளருமான எம்.அனீஸ் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திலும் கலாச்சார செயற்பாடுகளிலும் மக்கள் இன்று அதிக ஈர்ப்புடன் காணப்படுகின்றனர். இதனை இப்பள்ளிவாயலின் செயற்பாடுகளினால் மாற்றங்களைக்கொண்டு வர வேண்டும். குறிப்பாக இந்த பிரதேசத்தில் எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு அட்டாளைச்சேனை கடற்கரையில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் கலாச்சாரத்திற்கு ஏற்றப்போல் இடம்பெறுவதற்கு பள்ளிவாயல் அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த பள்ளியாவல் பழமை வாய்ந்த ஓர் பள்ளிவாயல் அது போல இன்று இதன் தோற்றமும் அழகானது இப்பள்ளிவாயலின் ஒவ்வொரு அபிவிருத்திகளிலும் இந்த பிரதேச மக்களும் அதிகாரம் உள்ளவர்களும் மேற்கொள்ள வேண்டும். மக்களினால் தரப்பட்ட ஆணை இது இதன் மூலம் இதன் பள்ளிவாயலுக்கோ அல்லது இந்த ஊர் பிரதேச அபிவிருத்திக்கோ அதிகப் படியான அக்கறை மூலம் சேவைகளை மேற்கொள்ள இருக்கின்றேன்.
அட்டாளைச்சேனை பெரிய பள்ளியாவயலின் கலாச்சாரமண்டப அபிவிருத்தி மற்றும் பள்ளிவாயலின் முன் முகப்பு அபிவிருத்திக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் பேசப்பட்டுள்ளது இது தொடர்பில் தலைவரும் அதிக அக்கறையுடன் இப்பள்ளிவாசலைப் பற்றி பேசியுள்ளார். ஆகவே மிக விரைவில் அதற்கான வேலைகளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த பள்ளியாவலின் மிக முக்கிய தேவையாக காணப்பட்ட இந்த ஒளி பிரச்சினைகள் இறைவனின் நாட்டத்துடன் தீர்க்கப்பட்டுள்ளது. அது போல் இன்னும் பல முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படவுள்ளதுடன் இதே போல அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள இன்னும் நில பள்ளிவாயல்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அது மாத்திரமின்றி அட்டாளைச்சேனை வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம் அதனை நாம் தள வைத்தியசாலையாக மாற்ற இன்னும் பல நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியப்பாடுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நாம்மேற்கொண்டுவருகின்றோம் அதற்கான பிரதான செயற்பாடாக வைத்தியசாலையின் முன் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் அதற்காக 80 இலட்சம் தேவைப்படுகின்றது அதற்கான உதவிகளை மேற்கொள்வதற்காக நேற்று முன் தினம் (09) தலைவர், முதலமைச்சர்களுடனும் முக்கிய பிரமுகர்களுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு நிதி சேகரிப்புகளிலும் ஏனைய அபிவிருத்தி தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும், இத வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக மாற்ற அனைவரும் உதவ வேண்டும் ஏனைய ஊர்கள் போல் நாமும் முன்னின்று ஊர் பிரதேச மக்கள் உதவுதன் மூலம் அத்தேவைகளை நிறைவேற்ற முடியும் ஆகவே பள்ளியாவல் நிருவாகம் மற்றும் ஊர் பிரமுகர்கள் ஊர் மக்கள் இணைந்து ஒத்துழைப்பதன் மூலம் வைத்தியசாலையின் தரமுயர்த்தலில் முக்கிய பங்கை நிறைவு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
இதன் போது, விசேட துஆப்பிராத்தனையும் இடம்பெற்றது. இதில் பள்ளியாவலின் நிருவாக சபை உறுப்பினர்கள், மரைக்கார்சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்