ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்த யூனானி வைத்தியர் பாத்திமா றுஸ்தா அம்ஜத் (37) நேற்று புதன் கிழமை (14) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானார்.
ஒரு பிள்ளையின் தாயாரான இவர் மன்னார் வங்காலைக் கிராமத்தில் அரச யூனானி வைத்தியராக கடமையாற்றி வந்த வேலையில் வழமைபோன்று கடந்த 3ஆம் திகதி தனது கடமைக்காக பேரூந்தில் செல்வதற்காக காத்திருந்த வேலையில் உறவினர் ஒருவரின் மோட்டார் சைகிளில் கடமைக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்ற வேலையில் மோட்டார் சைகிளில் இருந்து விழுந்து தலையில் கல் ஒன்று அடித்ததன் காரணமாக உடநடியாக மன்னார் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவசர சத்திர சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு சத்திர சிகிச்சை வைத்தியர் இல்லை என்ற காரணத்தால் அவரை கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவருக்கு தலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒருவார காலத்தின் பின்னர் அவருக்கு நினைவு திரும்பிய நிலையில் அவரை அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்ட்டுக்கு நேற்று (14) மாற்றிய நிலையில் அவர் வபாத்தானார்.