ஷபீக் ஹுஸைன்-
ரம்புக்கனை, ஹுரீமலுவை கிராமத்தில் அமைந்துள்ள பிலால் ஜுமுஆ பள்ளிவாசலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (24) காலை சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அல் ஹாஜ் அல் ஹாபில் மௌலவி ரிஸ்வி முப்தி அவர்கள் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
1906ஆம் ஆண்டு சிறிய அளவில் கட்டப்பட்ட இப் பள்ளிவாசல் 1936ஆம் ஆண்டிலும், 1984/85 ஆண்டிலும் மற்றும் 1990களிலும் புணரமைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் 2012ஆம் ஆண்டு புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்பள்ளிவாசல் மர்ஹும் நளீம் ஹாஜியார் புதல்வர்கள், பேரப் பிள்ளைகள் மற்றும் ஊர் மக்களின் முழு ஒத்துழைப்புடனும் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.