இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட கவியரங்கு..!

“வான் ஒலிக்கும் இறை புகழும் தக்பீர் நாதம் வானொலிக்கும் கொண்டு வரும் கவிதை ஓடம்" எனும் தலைப்பில் ஹஜ்ஜுப் பெருநாள் விசேட கவியரங்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 12-9-2016 பெருநாள் தினத்தன்று காலை 10.30 மணிக்கு ஒலிபரப்பாகும். கவிஞர் என். நஜ்முல் ஹுசைன் இக் கவியரங்கிற்கு தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் ரஷீத் எம். இம்தியாஸ் “ஷைத்தானுக்கு மட்டுமா கல்? " என்றும், - உக்குவெள்ள இளையநிலா பஸ்மினா அன்சார் ரிபாக் “மேனிக்கு மட்டுமா இஹ்ராம்?" என்றும், பேருவளை பரீஹா பாரூக் இம்தியாஸ் “இப்ராஹிம் நபிக்கு மட்டுமா தியாகம்? " என்றும், மாளிகாவத்தை இளநெஞ்சன் முர்ஷிதீன் “ஹஜ்ஜில் மட்டுமா ஒற்றுமை? " என்றும், புல்மோட்டை யாசிர் எம். அனிபா “உல்லாசப் பயணமா ஹஜ்? " என்றும் கவிதை பாடுகின்றனர். முஹம்மத் ரலீன் தயாரித்தளிக்கும் இக் கவியரங்கை பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ். முஹம்மத் ஹனீபா நெறிப்படுத்தியுள்ளார்.

நஜ்முல் ஹுசைன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -