ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

னித நேயம், தியாகம் ஆகிய உயரிய குணாம்சங்களினால் அழகுபெறும் புனித தினமாகிய ஈதுல் – அல்ஹா எனும் ஹஜ் திருநாள் இல்லாமியர்களின் வரலாற்றில் தனது முத்திரையினை ஆழமாக பதித்துள்ளது.

சமாதானத்தினதும் சகோதரத்துவத்தினதும் எல்லைகளை விரிவுபடுத்தி, முஸ்லிம் மக்கள் புனித குரானில் வரும் முஹமது நபி நாயகத்தின் வழிகாட்டலை ஏற்று பின்பற்றும் தத்தமது மத பக்திமீதான பரிய அர்ப்பணிப்பின் உச்சக்கட்டமே ஹஜ் வழிபாடு மூலம் வெளிப்படுகின்றது.

இப்பூவுலகில் வேறுபட்ட புவியியலின் தன்மைகள், பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு மொழிகள் உட்பட்ட அனைத்து எல்லைகளையும் கடந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினையும் ஒற்றுமை எனும் பிணைப்பால் இணைக்கும் இறை வழிபாடாகவே ஹஜ் பண்டிகை உலக மத வழிபாடுகள் மத்தியில் முதன்மைப்படுத்தப்படுகின்றது.

தனித்துவத்திற்கு மதிப்பளிப்பதன்மூலம் மானிட பிணைப்பின் உன்னத தன்மையினை அடிமனதில்தாங்கி அதன்மூலம் மானிட சமூகத்தில் ஏற்படுத்தும் சகவாழ்வினை முழு உலகமும் வேண்டிநிற்கும் இத்தருணத்தில், ஹஜ் திருநாள் மூலம் உலகிற்கு பெற்றுக்கொடுக்கும் இதமான சமிக்ஞை சமூகத்தினை ஆனந்தத்தில் ஆழ்த்ததக்கதாகும்.

புதியதோர் சமூகத்தினைநோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு, ஹஜ் பண்டிகை பெற்றுக்கொடுக்கும் அவகாசமானது மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது.

அவ்வாறானதோர் சுபமான எதிர்பார்ப்புக்களை முன்நிலைப்படுத்தி இன்று அனுஷ்டிக்க்படும் புனித ஹஜ் பண்டிகையானது, இலங்கைவாழ் சகல இஸ்லாமியர்களுக்கும் நல்லாசிகள் கிட்டும் ஹஜ் பண்டிகையாக அமைய எனது நல்லாசிகள் கலந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி.

தியாகத்தினதும், ஐக்கியத்தினதும், நல்லிணக்கத்தினதும் உன்னதமான படிப்பினையை ஒவ்வொரு வருடமும் எமக்கு நினைவூட்டும் ஹஜ் நிகழ்வானது, உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் அதன் மூலம் வெளிப்படும் ஆன்மீக ஒளியை சிறப்பாக எமக்கு எடுத்துக் காட்டுகிறது.

சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சகவாழ்வுடன் வாழ்வதற்கும், தியாக உணர்வுடன் தம்மிடம் காணப்படும் வளங்களை ஏழை எளியவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்குமான ஹஜ் கிரியையினை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் சமயத்தின் உள்ளடக்கம் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி நம் அனைவருக்கும் பெறுமதியான செய்தியை வழங்குகிறது.

அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து உலக சமாதானத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, வாழ்வின் நிலையற்ற தன்மையை நினைவுபடுத்தி மதக் கிரியைகளில் ஈடுபடும் சர்வதேச மாநாடு என்று ஹஜ் கடமையைக் கருதலாம். ஒருவரின் செல்வம், அதிகாரம்;, பதவி அல்லது அந்தஸ்து என்பவற்றை விட மனித நேயமே முக்கியமாகும் என்பது இங்கு சிறப்பாக வெளிப்படுகிறது.

ஹஜ்ஜின் ஆன்மீகப் பெறுமானங்கள் அனைத்து உலக மக்களையும் மிகவும் சிறப்பானவர்களாக மாற்றுவதற்குப் பங்களிப்பு செய்யட்டும் என்ற பிரார்த்தனையுடன், அனைத்து முஸ்லிம்களுக்கும் இன்பகரமான ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க,
பிரதமர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -