லசந்த விக்கிரமதுங்க விவகாரம் : ஊடகவியலாளர் மீது பாய்ந்த ரஞ்சன்

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீடியோ கமராவை தாக்கியுள்ளார்.  சிறப்பு பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நேற்று மாலை தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பை ரஞ்சன் ராமநாயக்க ஆயத்தப்படுத்தியிருந்தார்.

ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் சிலர்,

'லசந்த ஆயுதம் ஒன்றாக பலமாக தாக்கப்பட்டே உயிரிழந்திருந்தார். இது யாவரும் அறிந்த விடயம். எனினும் தற்போது அவருடைய சடலத்தை தோண்டியெடுப்பது தேவையற்ற விடயமாகும்' என்றனர். இதனையடுத்து சற்று கோபமடைந்த அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,


'லசந்த என்பவர் யார். அவர் ஒரு ஊடகவியலாளர். நீங்கள் ஊடகவியலாளர்களாக இருந்துகொண்டு இப்படி கதைக்கின்றீர்களே. நீங்கள் எல்லோரும் நல்ல ஊடகவியலாளர்கள். இந்த விடயத்தை மறந்து விடுங்கள்,

'ஏன் லசந்தவை பற்றி எந்தநேரமும் கதைத்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் ஒரு டெப்லொயிட் ஊடகவியலாளர் தானே. அவரை மறந்து விடுங்கள் என கோத்தபாய ராஜபக்ஷ சொன்னது போன்று நாமும் மறந்து விடுவோம். இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் தன்மை இதுதான் என்றார். இதனையடுத்து ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சரே நாங்கள் யாராவது லசந்த தாக்கப்பட்டு கொலை செய்யவில்லை என்று கூறினோமா? என்றார்.

அதற்கு அமைச்சர், 'லசந்த என்னுடைய நெருக்கமான நண்பராவார். அவரை எட்டு தடவைகளுக்கு மேல் சந்தித்துள்ளேன். அவர் எனக்கு பல தகவல்களை வழங்கியுள்ளார். அதேபோன்று நானும் அவருக்கு நாட்டில் நடந்த முக்கியமான ஊழல் செய்திகளை வழங்கியிருந்தேன்.

பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் திருமண நிகழ்வொன்று கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் மொத்த செலவையும் மஹிந்த ராஜபக்ஷவே ஏற்றுகொண்டார். இதேபோன்று மற்றுமொரு பத்திரிகையின் ஆசிரியர் தனது மகன் மற்றும் மகளை ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் அருகில் அமைந்திருக்கும் மற்றுமொரு பிரபல பலக்கலைக்கழகத்தில் சேர்த்தார்.

அவர்களின் பிள்ளைகளை பிரித்தானியாவில் உள்ள அனுர ஹே கொடவின் வீட்டில் தங்க வைத்தார். வீட்டு வாடகை பணமான பல இலட்ச பணத்தை வழங்கினார்.

இந்த விடயத்தை நான் லசந்தவுக்கு வழங்கினேன். பின்னர் அனுர ஹேகொட எனக்கு தொலைபேசி மூலம், பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான விடயம் என்பதால் இதனை பிரசுரிக்க வேண்டாம் என்றார். ஆனால் லசந்த இந்த விடயத்தை பத்திரிகையில் பிரசுரித்தார். இதனையடுத்து குறித்த ஆசிரியர் இன்றுவரை என்னோடு கதைக்கமாட்டார்.

தற்போது லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இவ்விடயம் தொடர்பில் சரியான முறையில் செய்திகளை வெளியிட்டு உந்துல் அளிக்கும் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயர்மட்டத்தில் உள்ள நபர்களை கைது செய்ய முடியும். நாம் எல்லோரும் கசிப்பு விற்பனை செய்யும் நபரை கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தும் சமூகமாக உள்ளோம்.

இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர்' பொலிஸ் அதிகாரி இலஞ்சம் வாங்குவதால் தாக்குதல் நடத்துகின்றார்களோ தெரியவில்லை' என்றார்.இதற்கு அமைச்சர் 'உங்களை போன்ற ஊடகவியலாளர்கள் இலஞ்சம் பெறுவது போன்றுதான் என்றார்.இதற்கு ஊடகவியலாளர் என்னை காட்டி அவ்வாறு கூறாதீர்கள். நான் ஒருபோதும் இலஞ்சம் வாங்கியதில்லை.

அமைச்சர் : நீங்கள் இலஞ்சம் வாங்கவில்லை. ஆனால் பலரின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது.

ஊடகவியலாளர்: இதேபோன்று இலஞ்சம் வாங்கிய பல அரசியல்வாதிகளின் பெயர்கள் எங்களிடம் உள்ளது.

கடும் கோபமடைந்த அமைச்சர் : 'தம்பி என்னை திருடன் என்று சொல்கின்றீர்கள். எனக்கென்று சொந்த வீடு வாகனம் இல்லை. இன்னமும் வாடகை வீட்டில் தான் உள்ளேன். அரசாங்க வாகனத்தையே பாவிக்கின்றேன்.

கெமராவை தாக்குகின்றார்...

நான் ஒருபோதும் திருட்டு வேலைகளை செய்ததும் இல்லை. கொள்ளையடித்ததும் இல்லை. எத்தனோல், போதைப்பொருள் கொண்டு வரவில்லை. தவறு எதனையும் செய்யாமையினால் தான் இவ்வளவு உறுதியாக நான் கதைக்கின்றேன்.

இதனால்தான் பயம் இல்லாமல் கதைக்கின்றேன். எனவே எனக்கு மரியாதை செலுத்த வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ எனக்கு 50 கோடி ரூபா தருவதாக கூறி அவருக்கு ஆதரவு வழங்க கூறினார். ஆனால் பணத்துக்கு அடிப்பணிந்து அங்கு செல்லவில்லை. பல தியாகங்களை செய்து தான் இந்த நிலைமையில் உள்ளேன். லசந்த என்னுடைய நண்பர் என்பதாலே நான் இந்த ஊடகவியலாளர் மாநாட்டை ஆயத்தம் செய்தேன்.

திருட்டு வேலைகளை செய்த ஏனைய அரசியல்வாதிகளுக்கு நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் கூறும். எனக்கு அம்மா அப்பா பிள்ளைகள் என யாரும் இல்லை. யாருக்கும் கடன் இல்லை. நான் எனக்கு விருப்பமான வகையில் தனிமையில் வாழ்ந்து வருகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -