சிலரின் சில்லறைத்தனமான எழுத்துக்களால் ஊடக்கத்துறைக்கே மானக்கேடு- மூத்த ஊடகவியலாளர் கவலை


டகவியலாளர் என்றால் அன்றொருகாலம் மதிப்பும், மரியாதையும், கவனிப்புக்களும் இருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கூஜாத்தூக்கிகளாக ஒவ்வொரு இணையத்தளங்களை உருவாக்கி சிலர் செய்திகள் என்று எழுதுகின்ற விடையங்களால் ஊடகத்துறையையே கேவலமாக நோக்க வேண்டியுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்று ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் பின்னால் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் அலையும் சிலர் ஊடகவியலாளர்களாகத் தங்களை இனம்காட்டி தான் சார்ந்துள்ள கட்சிக்கு அல்லது தனது ஆதரவான அரசியல்வாதிக்காக ஆதரவாக செய்தி என்ற பெயரில் குப்பை கொட்டுவது அல்லது அவருக்கு எதிரான கட்சிக்கோ, அரசியல்வாதிக்கோ அவதூறாக எழுதுவது இது தவிர வேறதுவும் அவர்களுக்குத் தெரியாது. 

எனவே இப்படியான சில்லறைத்தனமானவர்களை ஊடகவியலாளர்கள் என்று வைத்திருக்கும் ஊடகங்கள் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடாத்துதல் நல்லது என்று நினைக்கத்தோன்றுகிறது என ஆத்திரப்பட்டவராகத் தெரிவித்தார். இன்று சில அரசியல்வாதிகள் அவர்களின் எடுபிடிகளை வைத்து பல இணையத்தளங்களை உருவாக்கி அதன்மூலம் தமிழைக் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அதுமாத்திரமல்லாமல் அவர்களே பல இணையங்களை உருவாக்கி அவர்களே சங்கங்களையும் உருவாக்கி தலைவராகவும் ஆகும்கேவலம் நடந்தேறுகிறது.

செய்திகள் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் இன்று செய்தியாளர்களாக வலம்வருவது வேடிக்கையாக இருக்கிறது. ஆதாரமற்ற விடையங்களில் மூக்கு நுளைத்து அதன் பார தூரம் தெரியாமல் செய்திகள் என்று மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதை அனுப்பும் சிலர் தங்களுக்கென்று ஊடக அடையாள அட்டைகள் என்றும் இணையத்தளங்கள் என்றும் சிலர் அலைவதும் அதனை வைத்து போலியான கூத்துப் போடுவதும் நிறுத்தப்படவேண்டும். 

இதற்கான நடவடிக்கையினை ஊடக அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த அவர். சிலர் அரச காரியாலயங்களில் கடமை புரியும் நேரங்களில் கடமைகளைத் துஷ்பிரயோகம் செய்து வெளியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் நடவடிக்கைகளிலும் மாற்றத்தினைக் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஊடக அமைச்சு மேற்கொண்டிருந்தாலும் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பது கவலையளிக்கிறது என்று அந்த மூத்த ஊடகவியலாளார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -