கல்ஹின்ன சம்பவத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்ற சில தீய சக்திகள் முயற்சி - அமைச்சர் ஹலீம்

இக்பால் அலி-
ல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவம் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற சம்பவமாகும். இதனை இனவாதப் பிரச்சினையாக மாற்ற சில தீய சக்திகள் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுமூகமான ஏற்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கும் மத்திய மாகாண பொலிஸ் பிரதி மா அதிபருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். ஏச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ள முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.ஏச்.ஏ. ஹலீம் அங்கு இருந்து விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து உடனுக்குடன் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பினை ஏற்படுத்தி நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும்படி அடிக்கடி வலியுத்தியுள்ளேன். பெபிலிகொல்ல பள்ளிவாசல் மீதும் சில வீடுகள் மீதும் கல்லெறிந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவரை உடன் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அத்துடன் சம்மந்தப்பட்ட இடத்திற்கு இன்று மத்திய மாகாண பொலிஸ் மா அதிபரை அனுப்பி இரு சிவில் குழுக்களுக்கிடையே பரஸ்பர நல்லெண்ணப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்துமாறு நடவடிக்கை மேற் கொண்டுள்ளேன். எமது அமைச்சின் ஊடகப் பிரிவு செயலாளர் ரஸியின் மூலம் தகவல்களைப் பெற்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -