சாதாரண குடிமகனாக ஜனாதிபதி நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தம்...!

இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார். அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

அதற்கமைய சாட்சியாளரான ஜனாதிபதியிடம் குறுக்கு கேள்விகள் கேட்பதற்கு இரண்டு தரப்பு வழக்கறிஞர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. போலி சாட்சி வழங்கினால் தண்டனை அனுபவிப்பதற்கும், பொதுவான சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் கொடுக்கவுள்ளார். சில சந்தர்ப்பங்களில் பிரதமர் இந்த வழக்கின் சாட்சியாளராக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

JM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -