ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீமின் சேவை நாட்டின் ஏனைய மக்களுக்கு கிடைக்கவேண்டும் என அம்பாறை மாவட்ட அரச அதிபர் துசித பீ.வணிகசிங்க தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம் எழுதிய 'வயலில் ஒரு கிராமம்' நூல் வெளியீட்டுவிழா சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று (14) புதன்கிழமைஇடம்பெற்றது.
அல்-சுபைதா ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச அதிபர்துசித பீ.வணிகசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.அமீர், கிழக்குமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், சம்மாந்து பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்; அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, இறக்காமம் பிரதேச செயலாளர்ஏ.எல்.எம்.நசீர், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், கணக்காளர் எம்.எம்.உசைனா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியா கட்டுப்பாட்டு வைத்தியர் என்.ஆரிப், கண் வைத்திய நிபுணர் எம்.எம்.ஏ.றிசாத், சட்டத்தரணி என்.எம்.முஜீப் உள்ளிட்ட கல்விமான்கள், புத்திஜீவிகள், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் சலீம் 'வயலில் ஒரு கிராமம்' நூலினை பிரதம அதிதி அரச அதிபர் துசிதபீ. வணிகசிங்கவிடம் கையளித்து வெளியிட்டு வைத்தார். இதன்போது பிரதேச செயலாளர் சலீமின் சிறந்த சேவையினை பாராட்டி அரச அதிபர் துசிதபீ. வணிகசிங்க நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரச அதிபர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
பிரதேச செயலாளர் சலீம் சாய்ந்தமருது மக்களுக்கு தன்னாலான அனைத்து சேவைகளையும்நேர்த்தியாக செய்துள்ளார். இதனால் இவர் மக்களின் உள்ளத்தில் கௌரவமான இடத்தினைபிடித்துள்ளார். இதனாலேயே அவரின் சேவைகள் சொந்த ஊரில் தொடர வேண்டும் என மக்கள்எதிர்பார்க்கின்றனர். ஆனால் நான் இவர் பதவி உயர்வு பெற்று நாட்டின் ஏனைய மக்களுக்கும்இவரின் சேவைகள் கிடைக்க வேண்டும் என எண்ணுகின்றேன்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு பிரதேச செயலாளர் சலீம் அவரின்சிறந்த நிர்வாகத் திறனால் அரசின் நிதிகளைக் கொண்டு வீடுகளை அமைத்துக் கொடுத்து வொலிவோரியன் கிராமத்தை இன்று உருவாக்கியுள்ளார். இது அவரின் சிறந்த மக்கள்சேவைக்கு எடுத்துக்காட்டாகும். இவ்வாறான திறமை மிகக் நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் ஒரு சிறிய பிரதேச செயலகத்திற்கு செயலாளராக இருக்க முடியாது. இவரை நாம் சரியாகமக்கள் சேவைக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆகையால் இவர் உயர்ந்து செல்லவேண்டும்.
பிரதேச செயலாளர் சலீமின் ஆளுமை, உத்தியோகத்தர்களை மதிக்கும் விதம், வேலைகளில் அவர் காட்டும் ஆர்வம், மேலதிகாரிகளை அணுகும் விதம் என்பன என்னை கவர்ந்தவிடயங்களாகும். அரச நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்படும் புதிய தலை முறையினர் சலீம்போன்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளை ஒரு றோல் மொடலாக பின்பற்ற வேண்டும். இவரின் சேவைகள் தொடர வாழ்த்துகின்றேன் எனவும் தெரிவித்தார்.