ஏறாவூர் பிரதேசத்தில் சிங்கள குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை..!

ஏறாவூர் நிருபர் ஏ.எம்.றிகாஸ்-
சுமார் முப்பது வருட காலங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையோரப் பிரதேசத்தில் சிங்கள மீனவ குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அசாதாரண சூழ்;நிலையின் போது ஏற்பட்ட அச்சம் காரணமாக 1987ஆம் ஆண்டில் இங்கிருந்து 140 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கை கிழக்கு மாகாண காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபத்தி தலைமையில் புன்னக்குடா விகாரை முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய பிரதி பணிப்பாளர் ந.விமலராஜ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

இடம்பெயர்ந்த இக்குடும்பங்கள் தற்போது வேறு மாவட்டங்களில் தமது உறவினர் வீடுகளில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமாக புன்னக்குடா பிரதேசத்திலிருந்த வீடுகள், கடைகள் உள்ளிட்ட அனைத்து உடைமைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மீளக்குடியமர்த்துவதற்கு காணிக் கச்சேரிகள் மூலமாக இதுவரை 65 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்குரிய காணிகள் உடனடியாக அடையாளங்காணப்பட்டு படிப்படியாக இவர்களுக்கான அடிப்படை, வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுமென கிழக்கு மாகாண காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபத்தியினால் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, தமக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படுவதுடன் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இவர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -