அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.மொறவெவ பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் சேதமாக்கப்பட்ட மொறவெவ ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்தின் நிர்மானப்பணிகள் தரமற்ற மணல்-கல் வகைகளைக்கொண்டு நிர்மானிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை கடந்த ஆறு மாதத்திற்குள் மூன்று தடவைக்கும் மேலாக காட்டு யானைகளின் தாக்குதலினால் சேதமாக்கப்பட்ட நிலையில் அவ்வைத்தியசாலையை புணரமைத்து தருமாறு பிரதேச மக்களினால் வீதியை மறித்து போராட்டமும் செய்து வந்தனர்.
இதேவேளை அவ்வைத்தியசாலை மூடப்படவிருந்த நிலையில் அங்கு கடமையாற்றிய வைத்திய பொறுப்பதிகாரி போல் ரொஷான் மூடவிடாமல் கஷ்டங்களை எதிர்பாராமல் நோயாளர்களின் நலன் கருதி சேவையாற்றி வந்தார்.
இவ்வைத்தியசாலைகளின் குறைகளை நேரில் வந்து ஆராய்ந்த திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் கூடிய விரைவில் நிர்மாணிப்பதாக தெரிவித்து கூடிய விரைவில் இவ்வைத்தியசாலையின் நிர்மானப்பணிகளை ஆரம்பித்தும் ஒப்பந்த காரர்கள் தரமற்ற விதத்தில் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்கு தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் யாருமில்லாத நிலையில் ஒப்பந்தகாரர் தான் விரும்பிய படி பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பிராந்திய வைத்தியசாலைகளில் குறைபாடுகளை தேடி நிவர்த்திக்கும் சிறந்த சுகாதார பணிப்பாளராக சேவையாற்றி வரும் அனூசிய ராஜ்மோகனின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும்.தொழிநுட்ப உதவியாளரும் மக்கள் நலனில் அக்கறை காட்டி இவ்வைத்தியசாலையை சிறந்த முறையில் தரமான பொருற்களை பயன்படுத்தி நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.