ஹாசிப் யாஸீன்-
பிரேசில் நாட்டில் இடம்பெற்ற ரியோ பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றமற்றும் பங்குபற்றிய வீர, வீராங்கனைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சின்ஏற்பாட்டில் (21) புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், அநுராதபுர மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் எம்.இஷாக், உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சரின் உயர் அதிகாரிகள், விளையாட்டு ஆர்வலர்கள்என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இம்முறை இடம்பெற்ற ரியோ பரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்;டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம்வென்ற வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர் தயாசிறி ஜயசேகர ,பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரினால் பணப்பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.