துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை-
கடந்த வியாழக் கிழமை ( 01.09.2016) மு.காவினர் பாலமுனை சென்றுள்ளனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் பாலமுனைக்குள் வரக் கூடாதென கலைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்சில் அணியினர் மு.காவினரை இடை மறித்து பிரச்சனை ஏற்படுத்தியுள்ளனர்.
இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் குறிக்கிட்டு இப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இதன் பின்னர் அமைச்சர் ஹக்கீம் அனைவருக்கும் மிகக் கடுமையாக ஏசியுள்ளார். அண்மையில் மு.காவின் உயர் பீட உறுப்பினர் எஹியாக்கான் அம்பாறை மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சேவை செய்வதில்லை என குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.