ஏறாவூர் இரட்டைக் கொலை தொடர்பில் மூவர் கைது..!

றாவூர் பிரதேசத்தையே கவலைக்களமாக்கிய இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரும் அவருடன் சேர்த்து மேலும் இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நெருங்கிய உறவினர் இதுவரை பொலிசாரின் கேள்விகளுக்கு வாய் திறந்து பேசவில்லை என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு திரும்பியுள்ள நிலையில் அவரிடமும் இக்கொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர் கடந்த வாரம் தனது முகநூலில் இட்ட பதிவு தொடர்பிலும் பொலிசார் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தாய் மகள் இருவரும் பொல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் பொலிசாரின் தீவிர விசாரணை முடியும்வரை யாரும் 
வீண் வதந்திகளை பரப்பவேண்டாம் என்று மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்ககது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -