காரைதீவு நிருபர் சகா-
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் ஏற்பாட்டில் நாளை 01ஆம் திகதி சனிக்கிழமையன்று காலை மூன்றுபெரும் விழாக்கள் நடைபெறவுள்ளது. சர்வதேச சிறுவர் தினம் சர்வதேச ஆசிரியர் தினம் மற்றும் 3கோடி 60லட்சருபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள ஆசிரியர் மத்தியவள நிலையத்திற்கான அடிக்கல் நடுவைபவம் இகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நகிழ்வுகள் யாவும் சம்மாந்துறை பங்களாவடி ஜனாதிபதி விளையாட்டுசதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெறவுளள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்துசிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.எல்.எ.அமீர் ஜ.எல்.எம்.மாஹிர் த.கலையரசன் ஆகியோர்; கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான சகல ஏற்பாடுகளும்மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக விழாக்குழு தெரிவித்துள்ளது.