யாழ்ப்பாணம் பொம்மைவெளி, பறச்சேறிவயல், சாபிநகர், தூக்குமரக்காடு ஆகிய பிரதேசங்களில் நீண்டகாலமாக கைவிடப்பட்ட, தற்போது குடியேற்றக் காணிகளாக மாற்றமடைந்து வருகின்ற வயல் காணிகளை முறையாக அனுமதி பெற்று தரைக் காணிகளாக மாற்றுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இங்கு வயல் காணிகளின் உரிமையாளர்களுக்கு வழங்குகின்றோம்
1. பருத்தித்துறை வீதி, நல்லூர் முத்திரைச் சந்திக்கு (யூரோவில் மண்டப வீதி) அருகில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் வழங்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்தல் அவசியமாகும். அந்த விண்ணப்பப் படிவத்தோடு குறித்த காணியின் உறுதியின் போட்டோ பிரதி மற்றும் 3வருடங்களுக்கு உட்பட்ட வரைபடத்தின் பிரதி இணைக்கப்படுதல் வேண்டும். அத்தோடு குறித்த விண்ணப்பதாரருக்கு வீடமைப்பதற்கு வேறு காணிகள் இல்லை என்பதை கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் உறுதி செய்யும் கடிதம் இணைக்கப்படுதல் அவசியமாகும்.
2. கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த காணி நேரில் பார்வையிடப்படும், வடிகாலமைப்பு, நீர் வழிந்தோடல் போன்ற காரணிகள் குறித்து ஆராயப்படும், அதன் பின்னர்
3. மாவட்ட அல்லது பிரதேச கமநல அபிவிருத்திக் கூட்டத்தில் மேற்படி விண்ணப்பம் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும், அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கமநல உத்தியோகத்தர்களின் கருத்துக்களும், பெற்றுக்கொள்ளப்படும், குறித்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால்
4. மத்திய அரசாங்கத்தின் கமநல அமைச்சிற்கு அனுமதிக்காக பரிந்துரை செய்யப்படும், மத்திய கமநல அமைச்சே குறித்த காணிக்கான அனுமதியை வழங்கும்.
மேற்படி நான்கு படிமுறைகளையும் முறையாக நிறைவேற்ற 3-4 மாத கால அவகாசம் அவசியப்படுகின்றது. எனவே விண்ணப்பதாரிகள் இந்த நடைமுறைகளின்படி தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள், மேலதிக வழிகாட்டல்களையும் விளக்கங்களையும் கமநல சேவைகள் திணைக்களத்திலோ அல்லது எனது மக்கள் தொடர்பாடல் அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பப்படிவங்கள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு பின்வருவோரைத் தொடர்புகொள்ள முடியும். ஜனாப். எம்.எம்.எம்.நிபாஹிர் 077 760 6262 ; ஜனாப். ஐ.எல் நிராஸ் - 077 706 7366: ஜனாப். எம்.எல்.லாபிர்: 077 597 6619
மேற்படி தகவல்களை கௌரவ அ.அஸ்மின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்கள் சார்பில் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல்: என்.எம்.அப்துல்லாஹ்.