பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் -பல இடங்களும்




அய்ஷத்-

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஜமாஆ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை வழமை போன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது.

தொழுகையையும் குத்பா பிரசங்கமும் மெளலவி ஐ.எல்.எம். ஹாஸூம் அஸ்ஸூரி (மதனி) அவர்களால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து நடாத்திய திடல் தொழுகை..
எஸ்.அஷ்ரப்கான்-


ல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் நடாத்திய புனித ஹஜ்ஜூப் பெருநாள் நபி வழித் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (12) திங்கட் கிழமை இடம்பெற்றது.


காலை 6.30 மணிக்கு ஆண் பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற இத்தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். ஸபீர் நடாத்திவைத்தார்.

மௌலவி ஏ.எல்.எம். ஸபீர் அவர்கள் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தில், புனித தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுவதற்கு காரணமான நபி இப்றாஹீம் (அலை) அவர்களது தியாகம் நிறைந்த வாழ்க்கை வரலாறு உலக மக்களுக்கு பெரும் படிப்பினையாக உள்ளது. அவர்களது குடும்பத்தின் தியாக வரலாற்றை நாமும் பின்பற்ற வேண்டும். இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது முதிய வயதில் இறைவனிடம் துஆ கேட்டு பெற்றுக் கொண்ட தனது பிள்ளை இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து பலியிடுமாறு கட்டளை இட்டான் அந்த இறை கட்டளைக்கு அடிபணிந்து தந்தை இப்றாஹீம் (அலை) எந்தத் தந்தையும் செய்ய விரும்பாத ஒரு காரியமான தனது மகனை அறுத்து பலியிட துணிந்தார்கள்.


இதனை தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் கூறியபோது இறை கட்டளை என்றால் அதனை நிறைவேற்றுங்கள் எனக் கூறினார்கள். இது அவர்களின் இறையச்சத்தை வெளிப்படுத்துகின்றது. இறுதியில் இறைவன் உமது இறையச்சத்தை சேதிப்பதற்காகவே அவ்வவாறு கட்டளையிட்டதாக கூறி அவர்களை பொருந்திக் கொண்டு அதற்குப் பகரமாக மிருகங்களை அறுத்து தங்களின் கடமையை நிறைவேற்றுமாறு பணித்தான். அந்தத் தொடரில்தான் தற்போது நாம் உழ்ஹிய்யா கட்மையை நிறைவேற்றுகின்றோம்.


இதுவே உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியான வாழ்க்கைமுறையாகும். இதனை படிப்பினையாகக் கொண்டு நாமும் வாழக்கையில் இறை கட்டளையை ஏற்று நடக்க வேண்டும். என்றும் இஸ்லாமிய கற்றுத்தந்த அடிப்படையில் நாம் இப்பெருநாளை கொண்டாடுவோம் என்றும் குத்பா பிரசங்கத்தில் குறிப்பிட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

யு.எல்.எம். றியாஸ்-

ம்பாறை மாவடடத்திலும் தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று
மிக சிறப்பாக இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
திடல்களிலும்,பள்ளிவாசல்களிலும் இடம்பெற்றது.
சம்மாந்துறையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை திடல்கள் மற்றும்
பள்ளிவாசல்களில் இடம்பெற்றது.
சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லீம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு
செய்யப்படட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மௌலவி கே.எல். இப்ராஹீம் மதனி
அவர்களால் நடாத்தப்பட்ட்து.

தொழுகையைத் தொடர்ந்து குத்பா பிரசாங்கமும் அதைத் தொடர்ந்து விசேட துஆப்
பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதன்போது பெருமளவிலான ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்.




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -