மலேரியா இல்லாத நாடாக இலங்கை - அமைச்சர் நஸீர்

பைஷல் இஸ்மாயில் -
டந்த 4 ஆண்டு கலமாக கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு மலேரியா நோயாளர்களும் அடையாளம்காணப்படவில்லை என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற இலங்கை தொழில் நுட்பவியல் சேவை பொது சுகாதார வெளிக்களஉத்தியோகத்தர் விஸேடம், தரம் – 1, தரம் 2, தரம் – 3 போன்ற பதவிகளை வகிக்கின்றவர்களுக்கான சின்னம்அணிவித்தலும், சீருடை அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வும் இன்று (17) மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டின் இற்றைய காலப்பகுதி வரை கிழக்கு மாகாணத்தில்மலேரியாவினால் ஒருவர் கூட பாதிப்புக்குள்ளாகியதாக கண்டறியப்படவில்லை. இலங்கை நாடு ஒரு மலேரியாஅற்ற நாடாக திகழவேண்டும் என்ற என்னக் கருவில் எமது நல்லாட்சி அரசின் நாயகன் நாட்டின் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர்கள் பாரிய திட்டங்களைவகுத்து அத்திட்டத்தினை செயற்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தினை நாட்டிலுள்ள சகல மாகாண சுகாதாரஅமைச்சர்களும் செயற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்திலும் எமது அமைச்சினூடாக மலேரியா மற்றும் நாட்டைஅச்சுருத்திக்கொண்டிருக்கும் டெங்கு போன்ற நோய்களிலிருந்து எமது மக்களை பாதுகாக்கும் நோக்கில்மாகாணத்திலுள்ள 4 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளின் கீழுள்ள சகல சுகாதார வைத்தியஅதிகாரி காரியாலயங்களினூடாக இதனை செயற்படுத்தி வருகின்றோம்.

எமது மாகாணத்தில் மலேரியா இல்லை என்பதற்காக நீங்கள் யாரும் அசமந்தபோக்கில் இருந்துவிடவேண்டாம்.மக்களிடத்தில் உங்களை யார் என்று அடையாளப்படுத்துவதற்காகவும், அவர்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒருசினேக பூர்வமான ஒற்றுமையை உண்டு பன்னும் நோக்கிலேயே இந்த சீருடையை அரசாங்கம் அறிமுகப்படுத்திவைத்துள்ளது. இந்த சீருடைகளை யாராவது அணியாமல் தங்களின் கடமைகளை மேற்கொள்வார்களானால்அவர்களுக்கெதிரான் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதற்கமைவாக கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்பணிமனைகளின் கீழ் கடமையாற்றும் 60 இலங்கை தொழில் நுட்பவியல் சேவை பொது சுகாதார வெளிக்களஉத்தியோகத்தர்களுக்கான சீருடை இன்று வழங்கி அறிமுகமும் செய்து வைப்பட்டது. இதில் கல்முனைபிராந்தியத்தில் 15 பேரும், திருகோணமலை பிராந்தியத்தில் – 14 பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் – 31 பேரும்கடமையாற்றி வருகின்றவர்களுக்கு இந்த சீருடைகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட்நஸீரினால் வழங்கி அறிமுகமும் செய்து வைக்கப்பட்டது.

அம்பாறை பிராந்தியத்துக்கான சீருடைகள் வேறு ஒரு தினத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதாகவும்சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்செயலாளர் கே.கருணாகரன், மாகாணப் பணிப்பாளர் கே.முருகாணந்தம், மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலைபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -