நிறுவனங்களில் மனிதவள மேன்பாடு தொடர்பான கலந்துரையாடல்!...


எம்.வை.அமீர்-

னேடிய உலக பல்கலைக்கழகம் தொழில் மேன்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வரும் இவ்வேளையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களது தொழில் நிறுவனங்களை நடாத்திவரும் நிறுவனங்களையும் அதனோடு தொடர்புபட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களையும் செயற்திறன் மிக்கதாக மாற்றும் நோக்கில் மாவட்ட ரீதியாக அமைப்புக்களை நிறுவியுள்ளது.

நிறுவனங்களில் மனிதவளத்தை மேன்பாடுத்துவது தொடர்பாக அம்பாறை மாவட்ட ICT போரத்தின் பிரதாணிகளுடனான கலந்துரையாடல் ஒன்று போரத்தின் தலைவர் ஏ.வி.முஜீன் தலைமையில் சிம்ஸ் கேம்பஸின் சாய்ந்தமருது வளாகத்தில் 2016-09-13ஆம் திகதி இடம்பெற்றது.

கனேடிய உலக பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் செ.ஜெசுசகாயத்தின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கனேடிய உலக பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் தொடர்பான திட்ட முகாமையாளர் ஜூலியா கட்டர் மற்றும் மனிதவள மேன்பாடு தொடர்பான ஆலோசகர் கேன் விஜயகுமார் ஆகியோரும் கலந்து தொழில்துறையில் ஊழியர்களின் மேன்பாடு தொடர்பான பல்வேறு நுட்பங்களை விளக்கியதுடன் தொழில் நிறுவனங்களில் பெண் ஊழியர்களின் சமநிலை மற்றும் அவர்களின் மேன்பாட்டுக்கு நிறுவனங்கள் கையாளவேண்டிய பொறிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் சிம்ஸ் கேம்பஸின் பிரதானி அன்வர் முஸ்தபாவும் கலந்து பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்களில் தொழில் நிறுவனங்களும் தொழிலாளர்களும் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அவைகளை நிவர்த்திக்க கையாளக்கூடிய வழிமுறைகள் பற்றியும் விளக்கமளித்தார்.

அம்பாறை மாவட்ட ICT போரத்தின் செயலாளர் ஏ.எம்.நௌபல்மற்றும் பொருளாளர் உள்ளிட்ட பலரும் பங்குகொண்டிருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -