தேசிய ஊடக நிலையத்தின் தலைவராக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பதவியேற்பு


தேசிய ஊடக நிலையத்தின் தலைவராக முன்னாள் ஊடக அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இன்று பதவிகளை பொறுப்பேற்றார்.

விசும்பாயாவில் அமைந்துள்ள தேசிய ஊடக நிலையத்தின் காரியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவுள்ள இந்த நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க அண்மையில் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்; தேசிய ஊடக நிலையம் இலங்கைக்கு புதியவிடயமாக இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இது போன்ற ஊடக நிலையங்கள் காணப்படுகின்றன. தொழில்வாண்மை ரீதியாக சர்வதேச தரத்தில் இதனை கொண்டுவர நாம் எதிர்பார்க்கின்றோம்.

இன்று புதிய யுகத்தின் ஆரம்பம் இந்த நாட்டில் உருவாகியுள்ளது. காலகாலமாக காணப்பட்ட வெறுப்பு அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டின் பிரதான இரண்டு அரசியல் சக்திகளும் இணைந்துள்ளன. இனரீதியான ஒற்றுமை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. அந்த ஒற்றுமை ஊடாக மக்கள் அபிலாசைகளை நிறைவேற்ற அரசொன்று உருவாகியுள்ளது.

நாம் பல சமயங்களில் உணர்ச்சி பூர்வமாக எடுத்த தீர்மானகளின் பிழைகளை பிற்காலங்களில் திருத்திக்கொண்ட நிலைமைகளை காண்கிறோம். மொழிப்பிரச்சினை, அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்களில் நாம் தொடர்ந்தும் அந்த பிழைகளில் செல்லாமல் சரியான பாதையில் இந்த நாட்டை கொண்டு செல்ல ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுக்கும் முயற்சிக்கு ஊடகங்களின் ஆதரவும் எமக்கு தேவைப்படுகின்றது.

புதிய யுகமொன்றுக்காக, ஜனநாயக யுகமொன்றுக்காக நீதியின் ஆதிக்கம், மக்களுக்கு பொறுப்பு கூறும் சமூகமொன்றுக்காக ஜனாதிபதியும் பிரதமரும் இந்த பயணத்தை தொடர்ந்துள்ளனர். ஊடகங்களின் ஆதரவுடன் மக்கள் வேண்டியுள்ள அந்த வரத்தை நிறைவேற்ற இந்த நிறுவனம் செயற்படும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு, பிரதமர் ஊடகப்பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து தேசிய ஊடக நிலையம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.DC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -