கொழும்பு பல்கலைகழகத்தின் யுனானி மருத்துவ பீட மாணவர் சங்கத்தினால் (UMSA) ஏற்பாடு செய்யப்பட்ட இலவச யுனானி மருத்துவ முகாம் 24.09.2016 ஆம் திகதி கொழும்பு – 12 அல்-ஹிக்மா பாடசாலையில் யுனானி மாணவர்களின் பெரும் பங்களிப்போடு மிகவும் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடாத்தி முடிக்கப்பட்டது. இவ் இலவச மருத்துவ முகாமை நடாத்துவதில் வாழைத்தோட்ட யுமுலு இளைஞர் சங்கமும் இ பாடசாலை நிர்வாகமும் பெரும் பங்கு வகித்தன.
இவ் இலவச மருத்துவ முகாமில் பிரதானமாக மூட்டு வியாதிஇ நீரிழிவுஇ கொலஸ்திரோல் இ உயர்குருதி அமுக்கம் இ இரைப்பை அழற்சிஇ சலிஇ நாட்பட்ட இருமல் இ தலைவலிஇ முடி உதிர்வுஇ தோல் நோய்கள் இ மற்றும் பிள்ளை பேரின்மை போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டது. அத்தோடு பல்வேறு நோய்களுக்கான ஹிஜாமா சிகிச்சையும் தேர்ச்சி பெற்ற பல வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இவ் இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வதற்காக 400 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
யுனானி மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும் ஆயுர்வேத போதனா வைத்தியசாலையின் தேர்ச்சி பெற்ற பல மருத்துவர்களும் மற்றும் சமூக மருத்துவ அதிகாரி ஒருவரும் இவ் இலவச மருத்துவ முகாமில் அவர்களது இலவச சேவையை வழங்கி முகாமை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க உதவினர்.