வீதி புனரமைப்புப் பணிகளை நேரடியாக சென்று அவதானிக்கும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...!

ஹைதர் அலி -
மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் காணப்படும் மிகவும் பிரதான வீதிகளில் ஒன்றான மெரைன் ரைவ் வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கொண்ட முயற்சியினால் மாகாண சபையின் மூலம் நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு கடந்த 2016.08.03ஆந்திகதி திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. 

தற்போது இவ்வீதிக்கான புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 2016.09.03ஆந்திகதி நேரடியாக சென்றிருந்தார். அத்தோடு வீதி புனரமைப்பு வேலைகள் தொடர்பான விடயங்களை அங்கு பணியில் ஈடுபடும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் கேட்டறிந்து கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் புனரமைப்பிற்கான தமது ஆலோசனைகளையும் வழங்கினார்.

மக்களின் நீண்ட கால தேவையாக இருந்த மெரைன் ரைவ் வீதியின் சுமார் 520 மீற்றர் நீளமான வீதி புனரமைப்பிற்காக கிழக்கு மாகாண சபை மூலம் தற்போது 10 மில்லியன் ரூபா நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு இவ்வீதி கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போதுள்ள 4.5 மீற்றர் அகலமான வீதி போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்கால தேவைகளை கருதி 5 மீற்றர் அகலமான வீதியாக புனரமைப்பு செய்யப்படுகின்றது. 

மேலும் மெரைன் ரைவ் வீதியின் மீதமுள்ள பகுதிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபையின் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐ ரோட் திட்டத்தினூடாக காபெட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -