நல்வாழ்வு மற்றும் மனித உயிருக்கு மரியாதை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி திருத்தந்தை பிரான்ஸிஸ், பிறந்த குழந்தைகள் பிரிவொன்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இவ் விஜயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரோமிலுள்ள சன் கீஓவானி வைத்தியசாலையின் பிறந்த குழந்தைகள் பிரிவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த திருத்தந்தை அங்குள்ள பிறந்த குழந்தைகள், குழந்தைகளின் பெற்றேர் மற்றும் தாதியருடன் அளவலாவினார்.
நல்வாழ்வு, மனித உயிரின் மகத்துவம், இயற்கை மரணம், மனித வாழ்வின் கண்ணியம் போன்றவற்றை வலியுறுத்தியே திருத்தந்தையின் குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இரக்கத்தின் ஆண்டாக 2016 ஆம் ஆண்டை பிரகடனப்படுத்தியுள்ள திருத்தந்தை, இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவதொரு வெள்ளிக் கிழமைகளில் “இரக்கத்தின் வெள்ளி” ஒவ்வொரு இடங்களுக்கு இவ்வாறு விஜயம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த மாதங்களில் முதியோர் இல்லங்கள், போதை மற்றும் மதுவுக்கு அடிமையானோரின் மறுவாழ்வு மையம் மற்றும் ஓய்வுபெற்ற குருக்களின் இருப்பிடங்ளுக்கு திருத்தந்தை பிரான்ஸிஸ் விஜயங்களை மேற்கொண்டு தனது நேரங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.