ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்-
கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள கல்முனை தமிழ்பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளான கல்முனை மாநகர சபை முன்னாள்உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (03) சனிக்கிழமை கல்முனைமாநகர சபையில் நடைபெற்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கல்முனை மாநகர சபைஉறுப்பினர்களான வீ.கமலதாசன், ஏ.விஜயரட்னம், எஸ்.ஜெயக்குமார், கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களானநௌபர் ஏ.பாவா, கே.எல்.தௌபீக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாண்டிருப்பு, பெரிய நீலாவணை,சேனைக்குடியிருப்பு பிரதேச விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி, உட்கட்டமைப்புஅபிவிருத்திகள், சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸின் விசேட அழைப்பின் பேரில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்; கலந்து கொண்டு தமிழ் பிரதேசவைத்தியசாலைகள் அபிவிருத்தி தொடர்பாகவும் இதன்போது விரிவாககலந்துரையாடப்பட்டது.