நடைபாதை வியாபாரிகளை அகற்றுவதற்கு முன் மாற்றுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் - முஜீபுர் றஹ்மான்

கொழும்பு நகரில் கோட்டை, புறக்கோட்டை பகுதிகளில் நடைபாதை வியாபரிகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. கொழும்ப நகரில் வாழும் மக்களின் அனேகமானோர் மேற்படி நடைபாதை வியாபாரத்தை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தை தேடிக்கொள்பவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் குடும்ப பராமரிப்பு போன்றவை இந்த சுயதொழிலான நடைபாதை வியாபாரத்தின் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. முற்று முழுதாக இவர்களின் பொருளாதார தேவைகள் இந்த நடைபாதை வர்த்தகத்திலேயே தங்கியிருக்கிறது.

மஹிந்;த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கொழும்பு நகரை அலங்கரிக்கும் போர்வையில் இவர்கள் துரத்தப்பட்டனர். கடந்த தேர்தல்களில் நாம் வெற்றிபெறுவதற்கு அடிப்படையாக இதுவும் ஒரு காரணமாய் அமைந்தது.

எனவே இந்த நடைபாதை வியாபரிகளை அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு முன்னர் அவர்களுக்கான தொழில் செய்வதற்கான மாற்று இடங்களை வழங்கி அவர்களின் தொழிலை செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதே அரசாங்கம் என்ற ரீதியில் எமது கடமையாகும். அப்படி செய்யாமல் சுயதொழில் செய்யும் இவர்களை அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்வது பல சமூகவியல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையை தோற்றுவித்துவிடும்.

எனவே பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்த நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடங்களை வழங்கியதன் பின்னர் இது தொடர்பாக முடிவு எடுக்கும் படி பிரதமர் அவர்களையும்; மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரையும் வேண்டி நிற்கிறேன். 

முஜீபுர் றஹ்மான்,
பாராளுமன்ற உறுப்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -