நீங்கள் இச்சபையில் அமர்ந்திருக்க முடியாது - கம்மன்பிலவிடம் பிரதமர்

க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களால் இச்சபையில் அமர்ந்திருக்க முடியாது என சபையில் உதயகம்மன்பில எம்.பிக்கு தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இக் கேள்வியை சபாநாயகர் கருஜயசூரியவிடமும் பிரதமர் முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பிரதமர் பதில் வழங்கும் நேரத்தின் போதே உதய கம்மன்பில எம்.பி. கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடைநடுவில் இதனை தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்க முடியாது என உதய கம்மன்பில சபையில் தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களுக்கு அம் முன்னணியின் எம்.பியாக இச் சபையில் அமர முடியாது. 

எப்படி நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும். சபாநாயகர் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -