நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு சட்டத்தை அமுல்படுத்துமாறு நீதியான சமூகத்துக்கான அமைப்பு உட்பட பல சிவில் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.
தற்பொழுது இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் காத்திரமானதாக இல்லையெனவும், அவற்றை துரிதப்படுத்த விசேட நீதிமன்றமொன்றை அமைத்தல் வேண்டும் என்ற கோரிக்கை உட்பட ஐந்து பிரதான ஆலோசனைகள் அந்த மகஜரில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய பின்னர் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் அறிவித்துள்ளார்.