புஸல்லாவை இளைஞனின் மரணத்தில் திடீர் திரும்பம் - வழக்கு ஒத்திவைப்பு

க.கிஷாந்தன்-
புஸல்லாவை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை 23.09.2016 அன்று கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைகளை ஆரம்பித்த நீதிபதி திருமதி சாந்தனி மீகொட, உயிரிழந்த ரவிசந்திரனின் தந்தையிடமும், அண்ணனிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டார். அதன்பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்போது, தூக்குப்போடுவதற்கு குறித்த இளைஞன் பயன்படுத்தியதாகக் கூறப்படும் டீசெட்டை பயன்படுத்தி, சுருக்குஒன்றை போட்டுக்காட்டுமாறு பொலிஸார் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிக்கு பணிப்புரை விடுத்தார். இதன்படி சட்டத்தரணியும் கடும்சிரமத்துக்கு மத்தியில் சுருக்கொன்றை போட்டார். ஆனால், ஒருவர் தலையிடும் அளவுக்கு அதில் இடமிருக்கவில்லை.

அத்துடன், சுருக்குப்போட்டு உயிரிழந்திருந்தால், டீசேட் கிழிந்திருக்கும் அல்லது இழுபட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இந்த டீசெட்டில் நடக்கவில்லை. எனவே, இந்த மரணத்தில் மர்மம் இருப்பதை உணர்ந்த நீதவான், வழக்கு விசாரைணைய அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதேவேளை, சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிடுவதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு செல்லவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -