அகமட் எஸ். முகைடீன், ஹசீப் யாசீன்-
விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட பொழுது அன்று பாராளுமன்றத்தைபகிஷ்கரித்து அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் நானும்நண்பன் மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலும் என்பது நாடறிந்த வரலாறாகும். இந்த வரலாற்றைதிரிவுபடுத்தி தான் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து போர்க்கொடி தூக்கியதாக அமைச்சர்றிசாட் கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் நேர்மையற்ற முறையில் பேசி தனது வீர தீரசெயலுக்கு பதிவு வைத்துள்ளமை அவரின் அரசியல் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சினூடாக கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்டவிளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுவெள்ளிக்கிழமை (02) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில்உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இன்று சில சகோதரர்கள் இப்பிராந்திய அரசியல் ஸ்திர தன்மையை சீர் குலைப்பதற்காகசெயற்படுகின்றனர். சீசன் வியாபாரிகள் போன்று இங்குவந்து மேடை போட்டு உளறிமக்களின் ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கை தொடர்பில் ஒவ்வொருவரும் மிகஎச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் உண்மைக்கு புறம்பாக பழைய வரலாறுகளைமறைத்துப் பேசுகிறனர்.
கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில்; அன்று விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்குஎதிராக செயற்பட்ட பொழுது றிசாட் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அன்று ஆட்சிப்பங்காளிகளாக இருந்தபோது இவர்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்து போர்க்கொடிதூக்கியதாக நேர்மையற்ற முறையில் பேசியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு அரசுசாதகமாக நடக்கின்றது, அவர்களுடைய விடயங்களை ஆதரித்து செயற்படுகின்றது,முஸ்லிம்கள் வடகிழக்கில் கொல்லப்படுகின்றார்கள், அனாதையாக்கப் படுகின்றார்கள்என்பதற்காக 2002ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் ஒரு இளவயது பாராளுமன்றஉறுப்பினராக இருந்தும் கூட அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தேன்.
பல விடயங்களில் அரசு எங்களுக்கு அனுசரணையாக இருந்த போதும் முதல் முதலாக இதைஒரு தேசிய பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்பதற்காக வரவு செலவுத்திட்டத்தில்இதற்கான அழுத்தத்தை கொடுக்க பாராளுமன்ற பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்குஇறைவன் எண்ணத்தை தந்தான். அப்போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக நண்பன் மர்ஹும்அன்வர் இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து பேசி இருவரும் இரண்டு நாட்கள்பாராளுமன்ற பகிஷ்கரிப்பை மேற்கொண்டோம். இதற்கு மக்கள் அமோக ஆதரவைதெரிவிக்கின்றனர் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொண்டார்கள். அதன் பின்புதான்அன்றிருந்த அமைச்சர் அதாவுல்லா அதேபோன்று றிசாட் பதியுதீன் மற்றும் ஏனைய ஒன்பதுபாராளுமன்ற உறுப்பினர்களும் எங்களுடன் இணைந்தார்கள். இது ஒரு வரலாறு, இதையாரும் மறைத்துப்பேச முடியாது. ஆனால் அமைச்சர் றிசாட் தமக்குச் சாதமாக வரலாற்றைமாற்றி கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் தான் முன்னின்றி பாராளுமன்றத்தைபகிஷ்கரிப்பு செய்ததாக வாய் வீராப்பு பேசியுள்ளார்.
கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பொதுபல சேனா அமைப்பினர் அமைச்சர் றிசாட்டின்அமைச்சுக்குள் பலவந்தமாக புகுந்து அமைச்சர் றிசாட்டுக்கு நேரடியாக அச்சுறுத்தல்விடுத்தனர். இதற்கு எதிராக கிளர்ந்தெழாமல் மஹிந்த அரசாங்கத்தில் கைகட்டி, வாய் மூடிமௌனியாக இருந்தார். தனக்கு இடம்பெற்ற இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கமுடியாமல், பதவி விலக தைரியமில்லாத றிசாட், இந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படுமானால் தான் பதவி விலகி அரசுக்கு எதிராகசெயற்படுவேன் என்று வீர வசனம் பேசியதை நம்பி ஏமாற கல்முனை மக்கள் அரசியல்தெரியாத முட்டாள்களல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும்தெரிவித்தார்.