மெதிவ்ஸ் இலங்கை அணியின் தலைமையிலிருந்து நீக்கம்..!

வுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஏனைய கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது இலங்கை அணியின் தலைவராகவுள்ள அஞ்சலோ மெதிவ்ஸின் காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக நேற்று (02) அவர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியுடன் தம்புளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது அஞ்சலோ மெதிவ்ஸ் உபாதைக்குட்பட்டார்.

மெதிவ்ஸுக்குப் பகரமாக உபுல் தரங்க இலங்கை அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதேபோன்று, திஸர பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகேன் ஆகியோருக்குப் பதிலாக தசுன் ஷானக மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -