பகல் பொழுதில் சுமார் 60 நிமிடங்கள் உறக்கத்தில் ஆழ்பவர்களுக்கு அவ்வாறு உறங்காதவர்களுடன் ஒப்பிடுகையில் நீரிழிவு ஏற்படும் அபாயம் 45 சதவீதம் அதிகமாகவுள்ளதாக டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யமடா தொமாஹைட் தலைமையிலான ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.
மேற்படி ஆய்வின் முடிவுகள் ஜேர்மனிய முனிச் நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய நீரிழிவு ஆய்வுக்கான சங்கக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் சமூக வாழ்வு என்பன காரணமாக பலரும் இரவு வேளையில் போதியளவில் உறங்க முடியாத நிலைக்குள்ளாகி பகல் பொழுதிலான உறக்கத்தை நாடுவது வழமையாகவுள்ளது
இந்நிலையில் பகல் பொழுதில் நீண்ட நேரம் உறங்குவது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கும்
ஆய்வாளர்கள், ஆனால் 30 நிமிடத்
திற்கும் குறைந்த நேரம் பகல் பொழுது களில் உறங்குவது உடல் நலனுக்கு நன்மை பயக்கக் கூடியது என தெரிவிக்கின்றனர்.
திற்கும் குறைந்த நேரம் பகல் பொழுது களில் உறங்குவது உடல் நலனுக்கு நன்மை பயக்கக் கூடியது என தெரிவிக்கின்றனர்.