அஷ்ரப் ஏ சமத்-
சகவாழ்வினை மேம்படுத்துவது தொடா்பாக ஊடகவியலாளா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நேற்றும் (4) இன்றும் வாதுவை வில்லா ஓசியன் ஹோட்டலில் நடைபெற்றது. தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டடில் மும் மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சி, அச்சு ஊடக 30 ஊடகவியலாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமைச்சா் மனோ கனேசன்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினையை தீர்ப்பத்றகு முன் அரசகரும மொழியாக தமிழையும், சிங்களத்தையும் அமுலாக்கினால் 55 வீத பிர்ச்சினை முடிந்துவிடும் ஏனைய 45 வீதப் பிரச்சினையே எஞ்சியிருக்கும். அதற்கமைவாக தற்போது புதிய அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய குழுவில் நாட்டில் உள்ள சகல கட்சித் தலைவா்கள் ஜனாதிபதி பிரதமந்திரியுடன் நானும் அங்கத்தவராக உள்ளேன். அதில் அரச தொழில் மட்டும் அலுவலக மொழி தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும். இனி வரும் அரச ஊழியா்கள் கட்டாயம் இரண்டு மொழிகளிலும் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
எனது அமைச்சின் முக்கிய நோக்கம் சகவாழ்வினை இனங்களுக்கிடையிலேயே ஏற்படுத்துதல். நான் சிங்கள மொழியை அறவே தெரியாதவானாகவே இருந்தேன் 2001ஆம் ஆண்டு மாகாணசபை மற்றும் பாராளுமன்றங்களில் பேச்சாளா்கள். விமல் வீரவன்ச, பந்துல குணவா்த்தன ஆகியோா்களோடு விவாதங்களில் ஈடுபட்டு அவா்களது பேச்சுக்களை கேட்டு இயற்கையாக சிங்கள மொழியை பேசவும் சரளமாக விவாதிக்கவும் கற்றுக்கொண்டேன். கடந்த ஆண்டு சுதந்திர திணத்தில் தமிழ் மொழி மூலம் தேசிய கீதத்தை இயக்குவதற்கு முதலாவது இந்த அமைச்சின் ஊடகவே கோரிக்கை விடுத்து வெற்றிகண்டோம்.
அமைச்சரவையில் கூட அரச மொழிக்கு கட்டாயம் சிங்களம், தமிழ் சித்தியடைந்திருக்க வேண்டும். என பத்திரம் சமா்ப்பித்தேன் அதில் தமிழ் மொழி பேசக் கூடிய மக்கள் தொகையினா் கூடுதலாக வாழும் பிரதேசத்தில் அமுல்படுத்துவதற்கும் இனி வரும் ஆட்சேர்ப்பில் அதனை அமுல்படுத்துவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. என அமைச்சா் மனே கனேசன் அங்கு தெரிவித்தாா்.