ஏறாவூரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் ஏறாவூர் நகரமே சோகமயமானது, யார் அந்த கொலையாளி என்ற தேடுதலுடன் மக்களும் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
அதற்கமைய தாயையும், மகளையும் கொலைசெய்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஊர் பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு 1000 கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டு நின்று கோசங்கள் எழுப்பியவாறு நின்று கொண்டிருக்கின்றனர்.
இவர்களைக் கைது செய்ய பொலிஸ் சாஜன் பதுர்தீன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் அவர்களுக்கு மக்கள் நன்றியும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -