அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவுற்குற்பட்ட 08ம் வாய்க்கால் பகுதியில் வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் இன்று (24) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் அதே இடத்தைச்சேர்ந்த ஏக்கநாயக்க முதியன்சலாகே நவரெட்ணபண்டா (51வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் வகோதிபரின் வீட்டுக்கு முன்னாலுள்ள வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் கிடந்ததாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
வயோதிபர் மது அருந்துவதாகவும் -பெசர் -சீனி நோய்கள் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்த நிலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.