ஏறாவூர் – முகாந்திரம் வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
நேற்று (11) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தாயும் மகளும் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, கொலையாளிகள் கூரை வழியாக இறங்கி இக் கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நேற்று இடம்பெற்றதையடுத்து, உடலங்கள் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.