மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இந்தியன், முதல்வன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
மனிஷா கொய்ராலா நேபாளத்தை சேர்ந்தவர். இவருக்கும் தொழில் அதிபர் சாம்ராட் தகால் என்பவருக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
ஆனால் இரண்டு வருடத்திலேயே கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2012–ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். அதன்
பிறகு மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக நியூயார்க் சென்று பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்று இந்தியா திரும்பினார். தற்போது அவர் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
மனிஷாவின் குடும்பத்தினர் நேபாளத்தில் வசிக்கின்றனர். இவர் மட்டும் மும்பையில் தனியாக தங்கி இருந்து படங்களில் நடிக்கிறார். தனியாக இருப்பது அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக அறிவித்து உள்ளார். அத்துடன் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றும் கூறினார்.
தன்னிடம் அன்பு காட்டும் ஒருவரை மணக்க தீவிர மாப்பிள்ளை வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இந்த வருடம் இறுதியில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.