இந்தியாவில், ஹரியானா மாநிலம் மேவாத் நகரில்மாட்டு இறைச்சியை உண்டதற்காக இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம்செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரு பெண்களும் 2 வாரத்திற்கு முன்பு ஒரு குழுவினரால் பலாத்காரம்செய்யப்பட்டனர். இந்த நிலையில் அந்தப் பெண்களில் ஒருவர், தாங்கள்மாட்டு இறைச்சியினை உண்டதற்காகவே பலாத்காரம் செய்யப்பட்டதாககூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அப்பெண்கள் சமூக சேவகர் ஷப்னம் ஹஸ்மிமுன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர்உரையாற்றுகையில் பெண் கூறுகையில்,
எங்களிடம் அந்தக் குழு நீங்கள் மாட்டு இறைச்சியினை சாப்பிடுவீர்களாஎன்று கேட்டனர். அதற்கு நாங்கள் இல்லை என்று கூறினோம். ஆனால்அவர்கள், இல்லை பொய் சொல்கிறீர்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்று கூறிஅதற்குத் தண்டனை தான் இது என்று கூறி பலாத்காரம் செய்தனர் என்றார்.
ஆனால் இப்பெண்களோ அல்லது இவர்களின் பெற்றோரோ முதலில்கொடுத்த முறைப்பாட்டில் இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவிக்கவில்லை என்றுபொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் வயது 14, மற்றும் 20 எனதெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரு பெண்களும் கடந்த ஆகஸ்ட் 24 ஆம்திகதி மோத் நகரில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்தஇருவரும் சகோதரிகளாவர். சம்பவத்தின் போது இவர்களது அத்தையும், மாமாவும் குறித்த குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்டுவிட்டனர்.
மாடுகளை அறுக்க வேண்டாம் என்று கூறும் இந்த மிருகத்தனமானவர்கள் மனிதர்களைக் கொள்வது இந்தியாவில் அதிகரித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.