அமைச்சர் றிசாத் பான் கீ மூனை சந்தித்துப் பேசி மகஜர் ஒன்றும் கையளித்தார்..!

சுஐப் எம்.காசிம்-
லங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை (02/09/2016) சந்தித்தார். கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி அனீஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

முஸ்லிம் சமூகமும் மோசான முறையில் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் றிசாத், வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டு, இன்னும் அகதி முகாம்களில் வாழ்வதாகத் தெரிவித்தார். இந்த மக்களின் குடியேற்றத்துக்கும், அவர்களின் நலன்களைப் பேணுவதற்கும் ஐ.நா சபையின் பங்களிப்பு இன்றியமையாதது என்றார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் அதிகாரப்பகிர்வு என்பவற்றில் அனைத்து இனங்களும் பாதிக்கப்படாத வகையிலான செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென, அவர் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் காங்கிரஸின் தூதுக்குழுவினர், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பான, புள்ளி விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -