இன்றும் ஒலுவிலுக்கு விரைந்த அதிகாரிகள்...!

ம்பாறை, ஒலுவில் பிரதேசத்தின் அக்கரை 4ஆம் பிரிவில் குடியிருப்புப் பகுதியை அண்டி ஏற்பட்டுள்ள கடலரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் கருங்கல்லிலான தடுப்புச் சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கான வேலைத்திட்டம் நாளை புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்க, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கடலோரம் பேணல் மற்றும் கடல் மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஜெஸுர் ஆகியோர் ஒலுவில் பிரதேசத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்று கடலரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிக்கப்பட்ட அக்கரை 4ஆம் பிரிவைப் பார்வையிட்டனர். 

கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால், அக்கரை 4ஆம் பிரிவிலுள்ள 25 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வீடுகளிலுள்ள மக்கள் இடம்பெயரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேற்படி தடுப்புச் சுவர் அமைப்பதற்கான நிதியை கடலோரம் பேணல் மற்றும் கடல் மூலவள முகாமைத்துவ திணைக்களம் ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாகக் கடலரிப்பைத் தடை செய்வதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.ஹனீபா 
த.மி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -